பிப்.17 மாசி 5: ராமேஸ்வரம் சுவாமி அம்பாள் பல்லக்கில் பவனி. நத்தம் மாரியம்மன் சந்தனக்குடம் காட்சி. வேதாரண்யம், காளஹஸ்தி, ஸ்ரீசைலம் தலங்களில் சிவபெருமான் புறப்பாடு. சங்கரன் கோயில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். காரி நாயனார் குருபூஜை.
பிப்.18 மாசி 6: சனிப்பிரதோஷம், மகாசிவராத்திரி. சகல சிவபெருமான் கோயில்களிலும் நான்கு காலம் அபிஷேக ஆராதனை நடைபெறும். திருவண்ணாமலையில் இரண்டாம் காலத்தில் லிங்கோத்பவர் தரிசனம்.
பிப்.19 மாசி 7: முகூர்த்த நாள். கோயம்புத்துார் பத்ரகாளியம்மன் சிம்மவாகனம். ராமேஸ்வரம் சுவாமி அம்பாள் தேர். ஒப்பிலியப்பன் கோயில் சீனிவாசப்பெருமாள் பவனி. உ.வே.சுவாமிநாத ஐயர் பிறந்த நாள்.
பிப். 20 மாசி 8: அமாவாசை. திருவைகாவூர், திருக்கோகர்ணம், காளஹஸ்தி, இத்தலங்களில் சிவபெருமான் திருக்கல்யாணம். கோட்செங்கட் சோழ நாயனார் குருபூஜை. வேதாரண்யம் சிவன் கோயில் சுவாமி பவனி.
பிப். 21 மாசி 9: கோயம்புத்துார் கோணியம்மன் கோயில் உற்ஸவம் ஆரம்பம். சுவாமி மாலை முருகப்பெருமான் தங்க பூமாலை சூடியருளல். திருவள்ளூர் வீரராகவர் தெப்பம்.
பிப். 22 மாசி 10: திருப்பதி ஏழுமலையப்பன் மைசூர் மண்டபத்தில் எழுந்தருளல். கோயம்புத்துார் பத்ரகாளியம்மன் யானை வாகனம். நத்தம் மாரியம்மன் புஷ்ப பல்லக்கு.
பிப். 23 மாசி 11: முகூர்த்த நாள். சதுர்த்தி விரதம். தேவகோட்டை ரங்கநாதர், மிலட்டூர் விநாயகர், தேரெழுந்துார் ஞானசம்பந்தர் புறப்பாடு.