* கன்று போட்ட பத்து நாட்களுக்குட்பட்ட பசு மாட்டின் பாலை தெய்வ அபிஷேகத்திற்கு உபயோகிக்கக்கூடாது.
* நிவேதனம் செய்த தேங்காயை சமையலில் சேர்த்து, அந்த உணவை மறுபடியும் சுவாமிக்கு நிவேதனம் செய்யக்கூடாது.
* ஸ்படிகம், ருத்ராட்சம், துளசி போன்ற மாலையை கையில் வைத்து ஜபம் செய்யும் முன், அந்த மாலைகளை முதலில் நமஸ்கரிக்க வேண்டும்.
* விநாயகர் சன்னதியை தவிர மற்ற எந்த ஒரு தெய்வத்தின் எதிரிலும், தோப்புக்கரணம் போடக்கூடாது.
* கோயிலுக்கு செல்லும்போது செருப்பை எடுத்த கையால், தேங்காய், பழம், பூ போன்றவற்றை தொடாதீர்கள். நீரால் கையை கழுவிய பின் தொடுங்கள்.
* கோயிலில் கிண்ணம், சுவரில் உள்ள விபூதி, குங்குமம் பிரசாதத்தை இட்டுக்கொள்ள வேண்டாம்.