* ஆயுள் தேயும். ஆசையோ வளரும். இதுதான் வாழ்க்கை.
* மனதுடன் நடத்தும் போராட்டம் என்றைக்கும் ஓய்வதில்லை.
* உடலில் மூச்சுள்ள வரையில் மட்டுமே உங்களுக்கு மரியாதை இருக்கும்.
* பிறருக்காக நீங்கள் அழலாம். ஆனால் அவருக்காக நீங்கள் சாப்பிட முடியுமா?
* மனதை அடக்குகின்ற வழிமுறைகளையே சாஸ்திரங்கள், ஞான நுால்கள் எடுத்துரைக்கின்றன.
* முதுமை வந்ததும் ஆசை அடங்கிவிடும். செல்வம் சுருங்கியதும் சுற்றம் கலைந்துவிடும்.
* உலகம் விசித்திரமானது. நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள் என உங்களுக்கே தெரியாது.
* பிறப்பும், அடுத்து நடப்பதும் உங்கள் கையில் இல்லை.
* உருவமற்ற நமது மனம் பெரிய உருவம் படைத்த நம்மை ஆட்டிப்படைக்கிறது.
* 'நமசிவாய' என்னும் ஐந்து எழுத்துக்களும் சிவபெருமானே.
* ஆசைகளை அதிகப்படுத்தினால் துன்பத்தை அனுபவிக்க நேரிடும்.
* மானிடப்பிறவி அரிதினும் அரிது. அந்தணராகப் பிறப்பது அதனினும் அரிது.
* நதியானது கடலில் கலக்கும். அதுபோல் கடவுளை பிடித்துக்கொள்ளுங்கள்.
* முருகப்பெருமானே வேதத்தின் உட்பொருளாக இருந்து உலகை காத்து வருகிறார்.
* தன்னை வழிபடுவோரின் துயரத்தை உடனே போக்குபவர் விநாயகர்.
* பகவத் கீதையை படியுங்கள். கங்கை நீரை அருந்துங்கள்.
தெளிவுபடுத்துகிறார் ஆதிசங்கரர்