பிப்.24 மாசி 12: மதுரை கூடலழகர் உற்ஸவாரம்பம். ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி புறப்பாடு. கோயம்புத்துார் கோணியம்மன் சிம்ம வாகனம். சங்கரன் கோயில் கோமதியம்பாள் தங்கப்பாவாடை தரிசனம்.
பிப்.25 மாசி 13: திருச்செந்துார், பெருவயல்,திருப்போரூர், திருத்தணி, காங்கேயநல்லுார் இத்தலங்களில் முருகப்பெருமான் உற்ஸவாரம்பம். மதுரை இம்மையில் நன்மை தருவார் கோயிலில் உற்ஸவாரம்பம். மதுரை கூடலழகர் தங்க சிவிகையில் சேவை.
பிப்.26 மாசி 14: திருத்தணி முருகப்பெருமான் சூரியபிரபை பவனி. திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப்பெருமாள் உற்ஸவாரம்பம்.
பிப்.27 மாசி 15: குடந்தை சக்கரபாணி சந்திரபிரபையில் தரிசனம். திருக்கண்ணபுரம் சவுரிராஜபெருமாள் உற்ஸவாரம்பம். மதுரை கூடலழகர் கள்ளர் திருக்கோலத்தில் காட்சி. கரிநாள்.
பிப். 28 மாசி 16: திருத்தணி முருகப்பெருமான் காலை பல்லக்கு, இரவு வெள்ளி நாகவாகனம். திருச்செந்துார் முருகன் தங்ககிடா வாகனத்தில் புறப்பாடு. மதுரை கூடலழகர் கஜேந்திர மோட்சம். காரமடை அரங்கநாதர் உற்ஸவாரம்பம்.
மார்ச் 1 மாசி 17: திருக்கச்சிநம்பி நட்சத்திரம். கோயம்புத்துார் கோணியம்மன் கோயில் தேர். ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் உற்ஸவாரம்பம். குடந்தை சக்கரபாணி கருட வாகனம்.
மார்ச் 2 மாசி 18: பெருவயல் முருகப்பெருமான் மயில் வாகனம். குடந்தை ஆதிகும்பேசுவரர் கைலாச வாகனம். வேதாரண்யம் சிவபெருமான் திருவீதி உலா.