ஓம் அழகனே போற்றி
ஓம் அருளாகரனே போற்றி
ஓம் அறிவிற்கு உவமையே போற்றி
ஓம் அந்தணர் காவலே போற்றி
ஓம் அறிவுருவே போற்றி
ஓம் அழகுருவே போற்றி
ஓம் அம்பு பீடனே போற்றி
ஓம் அலிக்கிரகமே போற்றி
ஓம் அலங்காரனே போற்றி
ஓம் ஆனந்தனே போற்றி
ஓம் ஆயில்ய நாதனே போற்றி
ஓம் ஆலவாயில் அருள்பவனே போற்றி
ஓம் இரு வாகனனே போற்றி
ஓம் இளை நாதனே போற்றி
ஓம் இம்மை நலமளிப்பவனே போற்றி
ஓம் இசைஞானமருள்வனே போற்றி
ஓம் இளன் சாபம் தீர்த்தவனே போற்றி
ஓம் உயர்ந்தவனே போற்றி
ஓம் உகந்தவனே போற்றி
ஓம் உவர்ப்புச் சுவையனே போற்றி
ஓம் உடலிற் தோலானவனே போற்றி
ஓம் கலைவாணனே போற்றி
ஓம் கல்வியருள்பவனே போற்றி
ஓம் கருணாகரனே போற்றி
ஓம் கன்னிராசி அதிபதியே போற்றி
ஓம் கவியரசே போற்றி
ஓம் கவிஞனாக்குபவனே போற்றி
ஓம் கிரக பதியே போற்றி
ஓம் கிரக பீடாஹரனே போற்றி
ஓம் கிழக்கு நோக்கனே போற்றி
ஓம் கீர்த்தி வாய்த்தவனே போற்றி
ஓம் குஜன் பகைவனே போற்றி
ஓம் குதிரை வாகனனே போற்றி
ஓம் கேடயதாரியே போற்றி
ஓம் கேட்டை நாதனே போற்றி
ஓம் சசி சுதனே போற்றி
ஓம் சந்திர குலனே போற்றி
ஓம் சத்வ குணனே போற்றி
ஓம் சாந்த மூர்த்தியே போற்றி
ஓம் சிவனடியானே போற்றி
ஓம் சிவனால் கிரகமானவனே போற்றி
ஓம் சிங்க வாகனனே போற்றி
ஓம் சிங்கக் கொடியோனே போற்றி
ஓம் சுந்தரனே போற்றி
ஓம் சுப கிரகமே போற்றி
ஓம் சுகமளிக்க வல்லவனே போற்றி
ஓம் சொக்கருள் இணைந்தவனே போற்றி
ஓம் ஞானியே போற்றி
ஓம் ஞான நாயகனே போற்றி
ஓம் தவசீலனே போற்றி
ஓம் தவயோகியே போற்றி
ஓம் தயாகரனே போற்றி
ஓம் தனிக்கோயிலானே போற்றி
ஓம் தாரை மகனே போற்றி
ஓம் தரித்ர நாசகனே போற்றி
ஓம் திருவுருவனே போற்றி
ஓம் திருவெண்காட்டில் அருள்பவனே போற்றி
ஓம் துதிக்கப்படுபவனே போற்றி
ஓம் திருக்காளீஸ்வரத்தில் அருள்பவனே போற்றி
ஓம் தேவனே போற்றி
ஓம் தேரேறி வருபவனே போற்றி
ஓம் நட்சத்திரேசனே போற்றி
ஓம் நல்லுரு அருள்பவனே போற்றி
ஓம் நாற்கரனே போற்றி
ஓம் நாயுருவி சமித்தனே போற்றி
ஓம் நான்காமவனே போற்றி
ஓம் நாரணன் ப்ரத்யதிதேவதையே போற்றி
ஓம் பயிர்க்காவலனே போற்றி
ஓம் பசும்பயறு விரும்பியே போற்றி
ஓம் பச்சை வண்ண கிரகமே போற்றி
ஓம் பதினேழாண்டு ஆள்பவனே போற்றி
ஓம் பித்தளை உலோகனே போற்றி
ஓம் பின்னகர்வுடையோனே போற்றி
ஓம் பிரமனருள் பெற்றவனே போற்றி
ஓம் புராணத் தேவனே போற்றி
ஓம் புலவர் பிரானே போற்றி
ஓம் புலமையளிப்பவனே போற்றி
ஓம் பூங்கழலடியனே போற்றி
ஓம் புண்ணியனே போற்றி
ஓம் புரூரவன் தந்தையே போற்றி
ஓம் புகழ் சேர்ப்பவனே போற்றி
ஓம் பொன்னணியனே போற்றி
ஓம் பொற்கொடியோனே போற்றி
ஓம் பொன்மேனியனே போற்றி
ஓம் பொன்னாடையனே போற்றி
ஓம் போகம் அளிப்பவனே போற்றி
ஓம் மணிமுடியனே போற்றி
ஓம் மரகதப்பிரியனே போற்றி
ஓம் மனோகரனே போற்றி
ஓம் மஞ்சள் சந்தனப்பிரியனே போற்றி
ஓம் மதுரையில் பூசித்தவனே போற்றி
ஓம் ரவி மித்ரனே போற்றி
ஓம் ரவிக்கருகில் இருப்பவனே போற்றி
ஓம் ரேவதிக்கதிபதியே போற்றி
ஓம் ரிக் ஐந்தின் அதிகாரியே போற்றி
ஓம் வள்ளலே போற்றி
ஓம் வல்லபிரானே போற்றி
ஓம் வாட்கரனே போற்றி
ஓம் வடகீழ் திசையனே போற்றி
ஓம் வாக்கானவனே போற்றி
ஓம் வாழ்வளிப்பவனே போற்றி
ஓம் வித்தகனே போற்றி
ஓம் விஷ்ணு ரூபனே போற்றி
ஓம் விஷ்ணு அதிதேவதையனே போற்றி
ஓம் வைசியனே போற்றி
ஓம் வெண்காந்தமலர்ப் பிரியனே போற்றி
ஓம் 'ஜம்' பீஜ மந்திரனே போற்றி
ஓம் புத பகவானே போற்றி