கேளுங்க சொல்கிறோம்
மார்ச் 14,2023,12:26  IST

த.நேரு, வெண்கரும்பூர், கடலுார்.
*வருமானம் இருந்தும் முன்னேறவில்லையே...
இருப்பதைக் கொண்டு நிம்மதியாக வாழ்வதுதான் உண்மையான மகிழ்ச்சி. முன்னேற்றமும் அதுவே.

எம்.ஆனந்தி, காயல்பட்டினம், துாத்துக்குடி.
*குழந்தைகளிடம் படிக்கும் பழக்கம் குறைகிறதே...
அலைபேசி, இணையதள பயன்பாட்டை குறைத்தால் மட்டுமே படிக்க நேரம் கிடைக்கும். இதற்கு பெற்றோர், ஆசிரியர் வழிகாட்ட வேண்டும்.

கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன் புதுார், கன்னியாகுமரி.
*கார்த்தவீரியன், வீரபத்திரர் இருவரும் ஒருவரா?
சிவனிடம் தோன்றிய இவர்கள் வெவ்வேறானவர்கள். மனிதனாக வாழ்ந்து தீயசக்திகளை அழித்தவர் கார்த்தவீரியன். தெய்வமாக இருந்து தீயசக்திகளை அழிப்பவர் வீரபத்திரர்.

எஸ்.கிருஷ்ணமூர்த்தி, கோவைப்புதுார், கோயம்புத்துார்.
*அம்மனுக்கு கண்மலர் செலுத்துவது ஏன்?
கண்நோய் தீர்வதற்காக கண்மலரை காணிக்கை செலுத்துகிறோம். அப்போது மாவிளக்கை ஏற்றுங்கள்.

எம்.கமலேஷ், சோழிங்கநல்லுார், சென்னை.
*குரங்கு, நாய் அடிக்கடி என்னை துரத்துகின்றன. என்ன செய்யலாம்?
இது விலங்குகளின் இயல்பு. அவற்றை விட்டு விலகுங்கள்.

கே.ஜனா, புதுடில்லி.
*மிளகு சாதத்தை அன்னதானம் செய்யலாமா?
செய்யலாம். அர்த்தஜாம பூஜையின் போது கோயிலில் நைவேத்யமாக மிளகு சாதம் படைப்பர். அதற்கு பொருளுதவி செய்யுங்கள்.

ஆர்.அருணா, திருப்பரங்குன்றம், மதுரை.
*பாடல்கள் பாடும் முன் தெய்வத்திடம் உத்தரவு கேட்கணுமா?
தேவையில்லை. பக்தியுடன் பாடினால் போதும்.

பி.ஜெயா, மைசூரு.
*யந்திரத்தில் மந்திரங்களை உருவேற்றுவது எப்படி?
மந்திரத்தை உச்சாடனம் (தொடர்ந்து ஜபிப்பது) செய்தால் யந்திரத்தில் ஏறும். இதனை 'உருவேறத் திருவேறும்' என்பர்.

க.வள்ளி, ஆண்டிபட்டி, தேனி.
*அம்மன் தனித்து அருள்புரியும் தலங்களைச் சொல்லுங்கள்?
சமயபுரம், புன்னைநல்லுார், பண்ணாரி மாரியம்மன், மேல்மலையனுார் அங்காளம்மன், ஆனைமலை மாசாணியம்மன் என எத்தனையோ தலங்கள் உள்ளன.

என்.சம்பத், உத்திரமேரூர், காஞ்சிபுரம்.
*இறப்புத் தீட்டின் போது சந்தியாவந்தனம் செய்யலாமா?
தீட்டு காலத்தில் அர்க்கியம் இன்றியும், வியாஹிருதி நீக்கி மந்திரம் ஜபித்தும் சந்தியாவந்தனம் செய்யலாம். இதற்கான விளக்கத்தை புரோஹிதர்களிடம் கேளுங்கள்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X