* மிதமாக சாப்பிட்டால் உழைப்பில் ஆர்வம் கூடும்.
* எதிலும் நம்பிக்கையில்லாதவர் வாழத் தகுதியற்றவர்.
* பண்படுத்தப்பட்டவர் நல்ல விளைச்சல் நிலத்திற்கு ஒப்பானவர்.
* பரிந்து பேசுகிறார் என்பதற்காக ஏமாந்து போகாதீர்.
* தினமும் நன்மை செய்ய வேண்டும் என நினையுங்கள். நாளடைவில் நல்லவராகவே மாறி விடுவீர்.
* துாய்மையானவர்களுக்கு மட்டும் ஆண்டவர் இறங்கி வருவார்.
* பிரச்னைக்குரியவரிடம் பேசினால் தீர்வு கிடைக்கும்.
-பைபிள்