பலரும் தங்களால் இயன்ற அளவு தர்மம் செய்கின்றனர். இதற்கு பணம் அவசியம். ஆனால் செலவில்லாமலும் தர்மம் செய்யலாம். எப்படி?
* இரண்டு நபர்களுக்கு இடையே பிரச்னை ஏற்பட்டால் அதை தீர்க்கலாம்.
* பிறருடன் இனிய சொற்களை பேசி மகிழலாம்.
* பாதையில் கிடக்கும் பொருளை அப்புறப்படுத்தலாம்.
* நன்மை செய்யுமாறு எல்லோருக்கும் அறிவுரை கூறலாம்.
* பிறர் செய்யும் தவறை சுட்டிக்காட்டலாம்.
* வழிதெரியாத நிலையில் ஒருவருக்கு வழிகாட்டலாம். இத்தகையை செயல்களுக்கும் நற்கூலி உண்டு.