இல்லறம் ஓர் ஒப்பந்தம் என்பதால் மணமக்களின் சம்மதம் கட்டாயமாகும். திணிக்கப்படும் திருமணம் மகிழ்ச்சியற்று காணப்படும். சில வேளைகளில் மணமுறிவுக்கும் இட்டு செல்லும். வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதில் அவர்களுக்கு நல்ல ஆலோசனைகளை பெற்றோர் வழங்க வேண்டும். அதுபோல் மணமக்களும் பெற்றோரின் கருத்துகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். ஆனால் இறுதி முடிவு செய்ய வேண்டியது மணமக்களே ஆவர்.