யார் ஒருவன் குற்றவாளியாக இறைவனிடம் வருகின்றானோ, அவனுக்கு நிச்சயமாக நரகந்தான். அதில் அவன் மாளவும் மாட்டான், வாழவும் மாட்டான். யார் விசுவாசம் கொண்டவராகவும், நல்ல செயல்களை செய்தவராகவும் வருகின்றாரோ, அவருக்கு மேலான பதவிகள் இருக்கின்றன. மறுமையில் அவர்களுக்கு நிலையான சுவனபதிகள் உண்டு. அவற்றில் நீரருவிகள் சதா ஓடிக்கொண்டேயிருக்கும். அவற்றில் என்றென்றுமே தங்கிவிடுவர். இதுதான் பரிசுத்தவான்களுடைய கூலியாகும்.