* 'ஓம் நமோ நாராயணாய' என மூன்று பதங்களைக் கொண்டது திருமந்திரம்.
* பெருமாள் கோயில் கொண்டிருக்கும் திவ்ய தேசங்களுக்கு இயன்ற உதவிகளை செய்.
* உலகியலைச் சார்ந்த பற்றினைக் கைவிடு.
* பெருமாளுக்கு நிவேதனம் செய்த உணவுகளை சாப்பிடு. அதுவே சிறப்பு.
* ஆழ்வார்கள் அருளியுள்ள வேதத்துக்கு ஒப்பான திவ்யப்பிரபந்தங்களை படி.
* பெருமாளே பரம்பொருள் எனத் தெளிந்து, அவரிடம் பக்தி செலுத்து.
* எந்தவொரு செயலையும் பலனை எதிர்பார்த்து செய்யாதே.
* உடலே ஆத்மா என எண்ணாதே. சரீரம் வேறு. ஆத்மா வேறு.
* பெருமாளின் திருவடிகளில் சரணடைந்தவருக்கு துன்பம் இல்லை.
* புலனடக்கம் என்பது ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டும்.
* அற்ப விஷயங்களில் ஆசை வைக்காதே.
* எப்போதும் பிறரை குறை கூறுபவர்களிடம் சேராதே.
* ஆசார்யார்களை சராசரி மனிதராக எண்ணாதே.
* ஞானம் நிறைந்த பெரியவர்களை பார்த்தால் உடனே வணங்கு.
* 'நாம் பெருமாள் அடியார்களுக்கு அடிமை' என்ற உணர்வோடு செயல்படு.
* வைஷ்ணவர்களுடைய பிறப்பை பற்றி ஆராயாதே. அது கொடிய பாவமாகும்.
சொல்கிறார் ராமானுஜர்