மார்ச் 10 மாசி 26: முகூர்த்த நாள். சங்கடஹர சதுர்த்தி. ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் புறப்பாடு. சங்கரன்கோயில் கோமதியம்பாள் தங்கப்பாவாடை தரிசனம். திருத்தணி முருகன் கிளி வாகனம். இன்று செடி, கொடி வைக்க நன்று.
மார்ச் 11 மாசி 27: மன்னார்குடி ராஜகோபால சுவாமி உற்ஸவம் ஆரம்பம். காங்கேயநல்லுார் முருகன் விடையாற்று வைபவம். திருவொற்றியூர் சிவபெருமான் புறப்பாடு. சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப்பெருமாள் கோயிலில் வரதராஜர் மூலவருக்கு திருமஞ்சனம். திருநள்ளாறு, குச்சனுார், இலத்துார் சனிபகவான் சன்னதியில் சிறப்பு வழிபாடு.
மார்ச் 12 மாசி 28: காங்கேய நல்லுார் முருகன் லட்சதீபக்காட்சி. திருப்பரங்குன்றம் முருகன் பவனி. கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப்பெருமாள் சன்னதி எதிரில் உள்ள அனுமனுக்கு திருமஞ்சனம்.
மார்ச் 13 மாசி 29: முகூர்த்த நாள். திருவொற்றியூர் சந்திரசேகரர் தேர். சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி மூலவருக்கு திருமஞ்சனம். திருவெள்ளறை சுவேதாத்திரிநாதர் கருட வாகனத்தில் புறப்பாடு. செடி, கொடி வைக்க நன்று.
மார்ச் 14 மாசி 30: கும்பகோணம் ஒப்பிலியப்பன் கோயிலில் சீனிவாசப்பெருமாள் காலை பல்லக்கு. இரவு வெள்ளி அனுமன் வாகனத்திலும் தாயார் வெள்ளி கமல வாகனத்திலும் புறப்பாடு. குரங்கணி முத்துமாலையம்மன் பவனி.
மார்ச் 15 பங்குனி 1: ஷடசீதி புண்ணியகாலம். காரடையான் நோன்பு. ஸ்ரீபெரும்புதுார் மணவாள மாமுனிகள் புறப்பாடு. திருவொற்றியூர் சந்திரசேகரர் மகிழடி சேவை. அழகர்மலை கள்ளழகர் புறப்பாடு.
மார்ச் 16 பங்குனி 2: சீதாதேவி விரதம். திருவொற்றியூர் சந்திரசேகரர் தீர்த்தம். சுவாமிமலை முருகப்பெருமான் வைரவேல் தரிசனம். திருவெள்ளறை சுவாமி பூந்தேரில் பவனி. திருப்பதி ஏழுமலையப்பனுக்கு புஷ்பாங்கி சேவை.