இறை நம்பிக்கை மனிதனை கீழான நடத்தைகளில் இருந்தும், கேவலமான செய்கையில் இருந்தும் அப்புறப்படுத்திடும் ஆற்றல் மிக்கது. மனிதன் துாய்மையான வாழ்க்கையை நோக்கி நடக்க இது உதவுகிறது.
ஒருமுறை அன்சார் (மதீனாவைச் சார்ந்தவர்) ஒருவரைக் கடந்து சென்றார் நபிகள் நாயகம். அப்போது அன்சார் தன் சகோதரனை ஏசிக் கொண்டிருந்தார். சகோதரருடைய நடத்தை நல்லதாக இல்லையென்பதே அவரின் குற்றச்சாட்டு.
அதற்கு நாயகம், ''அவரை விட்டுவிடுங்கள். ஏனெனில் நன்நடத்தை என்பது நம்பிக்கையின் ஒரு பகுதியாகும்'' என்றார்.