தோழர் ஒருவர் நபிகள் நாயகத்திடம், ''மனிதர்களில் தொலைநோக்கும், விழிப்புணர்வும் கொண்டவர் யார்'' எனக்கேட்டார்.
அதற்கு அவர், ''யார் மரணத்தை அதிகமாக நினைவு கூர்கிறாரோ, இன்னும் யார் மரணத்திற்காக அதிகம் தன்னைத் தயார்படுத்திக் கொள்கிறாரோ அவர்தான் தொலைநோக்குடன் சிந்திப்பவர். இவர்கள் உலகிலும் கண்ணியம் பெறுகின்றனர். மறுமையிலும் உயர்வும் சிறப்பும் அடைகிறார்கள்'' என சொன்னார்.