பலரும் உங்களிடம் உதவி கேட்டு வருகிறார்களா... முடிந்தால் உதவுங்கள். இல்லையெனில் அமைதியாக இருங்கள். அவர்கள் மீது கோபப்படாதீர்கள். 'இப்போது வாய்ப்பு இல்லை. பிறகு செய்கிறேன்' என ஆறுதல் கூறுங்கள். அதுவே எல்லோருக்கும் நல்லது.
சிலரோ, 'என்னைப் பார்த்தாயா. எவ்வளவு பெரிய உதவியை செய்திருக்கிறேன்' என சொல்லிக் காட்டுவர். இது தவறான விஷயம். எப்போதும் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவி செய்யுங்கள். அதை சொல்லிக்காட்டாதீர்கள்.