மார்ச் 17 பங்குனி 3: முகூர்த்த நாள், திருவிடைமருதுார் பிரகத்குசாம்பிகை புறப்பாடு. திருவெள்ளறை சுவாமி காலை வண்டலுார் சப்பரத்திலும் இரவு தங்க குதிரை வாகனத்திலும் பவனி.
மார்ச் 18 பங்குனி 4: சாத்துார் வேங்கடேசப்பெருமாள், ஸ்ரீபெரிய பெருமாள் புறப்பாடு. கீழ்திருப்பதி கல்வேங்கடேசப் பெருமாளுக்கு திருமஞ்சனம். குச்சனுார், இலத்துார் சனீஸ்வர பகவானுக்கு அபிஷேகம் ஆராதனை.
மார்ச் 19 பங்குனி 5: பிரதோஷம். சிவன்கோயில்களில் நந்தீஸ்வரருக்கு அபிஷேக ஆராதனை. மன்னார்குடி ராஜகோபால சுவாமி சிம்ம வாகனம். ஒப்பிலியப்பன் கோவில் சீனிவாசப்பெருமாள் சப்தாவர்ணம்.
மார்ச் 20 பங்குனி 6: மாதசிவராத்திரி. தண்டியடிகள் குருபூஜை. சங்கரன்கோவில் கோமதியம்பாள் புஷ்ப பாவாடை தரிசனம். திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் புறப்பாடு.
மார்ச் 21 பங்குனி 7: அமாவாசை. திருகண்ணபுரம் சவுரிராஜப்பெருமாள் விபீஷணஆழ்வாருக்கு நடையழகு சேவை. சுவாமிமலை முருகப்பெருமான் தங்க பூமாலை சூடியருளல்.
மார்ச் 22 பங்குனி 8: தெலுங்கு வருடப்பிறப்பு. ஸம்ஸ்வர கவுரீ விரதம். திருப்பதி திருவேங்கடமுடையான் சன்னதியில் சிறப்பு அபிஷேகம்.
மார்ச் 23 பங்குனி 9: முகூர்த்த நாள், சந்திர தரிசனம். பெரிய பெருமாள் திருநட்சத்திரம். சென்னை திருவல்லிக்கேணி பார்த்த சாரதிப்பெருமாள் கோயிலில் ராமர் மூலவருக்கு திருமஞ்சனம். திருப்பதி ஏழுமலையான், ஸ்ரீரங்கம் நம்பெருமாள், தேவகோட்டை ரங்கநாதர் புறப்பாடு.