* உங்களிடம் மகிழ்ச்சி இல்லையா கவலைபடாதீர். எல்லோரிடமும் அன்பு செலுத்துங்கள். மகிழ்ச்சி தானாக வரும்.
* ஆண்டவரை தெரியும் என்பவர்களை விட அவர் வழியை பின்பற்றுபவர்களே பாக்கியவான்.
* இன்பம், துன்பம் இரண்டையும் ஒன்றாக பார்ப்பவருக்கு தாழ்வு ஒரு போதுமில்லை.
* பரலோகத்திற்கு செல்ல விரும்புபவர்கள் இப்பூவுலகில் வேறுபாடு கருதாமல் வாழ்வர்.
* இரக்கம், பொறுமை, புன்னகை, உதவி, விட்டுக்கொடுத்தல் இந்தகுணம் இல்லாதவர்கள் பயன் இல்லாதவர்கள்.
* உயர்ந்தவர், பெரியோர்களை விருந்துக்கு அழைப்பது தவறில்லை. ஆனால் அவர்களுக்கான மரியாதையை கொடுங்கள்.
* தேவனிடத்தில் ஏற்படும் பயம் தேவலோகத்திற்கு அழைத்துச் செல்லும்.
-பைபிள்