* வேலையில் குறிக்கோளுடன் செயல்படு. உயர்வை அடைவாய்.
* வேலையில் அலட்சியமாக இருந்தால் ஏமாற்றம் அடைவாய்.
* புகழுக்காக செய்யும் பணி துாய்மையான மனங்களில் ஒட்டுவதில்லை.
* பிறருக்கு வழியை சொல்வதைக்காட்டிலும் எடுத்துக்காட்டாக இருங்கள்.
* உறுதியாக செயல்படுத்தும் செயல் முன்னேற்றம் அடையும்.
* உங்களுடைய வாழ்க்கை முறை ஒருவரால் கண்காணிக்கப்படுகிறது என்பதை மறவாதீர்.
* குறுக்கு வழியில் கிடைக்கும் பதவி குறுகிய காலத்தில் காணாமல் போய் விடும்.
* கடுஞ்சொற்களை பயன்படுத்தாதீர். அது வேதனையை தரும்.
* அளவான செல்வம் நிறைவான வாழ்விற்கு வழி.
* உணர்ச்சிகளை நெறிப்படுத்துபவரே சிறந்த வீரர்.
* பிறர் துன்பம் கண்டு வருந்தும் போது வானுலகம் தானாக வழி திறக்கும்.
* நல்வழியில் நடப்பவர்களுக்கு ஒரு நாளும் தீங்கு வராது.
* பெண்மையை போற்றுங்கள்.
* செயலில் குழப்பம் ஏற்படுகிறது என்றால் அதை தள்ளிப் போடுங்கள்.
* உடனுக்குடன் செய்யும் வேலைகள் மகத்தான வெற்றியை பெறும்.
-பொன்மொழிகள்