* துணிச்சலோடு உழைப்பவருக்கு வெற்றி உறுதி.
* பகையை அன்பினாலும், சோம்பலை செயல் ஊக்கத்தினாலும் வெல்லுங்கள்.
* வாக்கு, கை சுத்தமாக இருப்பவர்கள் எதற்கும் அஞ்சுவதில்லை.
* விருப்பமில்லாத கல்வி பிடிக்காத உணவிற்கு சமம்.
* நாணயம் மிக்க மனிதர் அருகில் ஆண்டவர் இருப்பார்.
* உயிர்களிடம் அன்பு செலுத்துபவரை தேவலோகம் வரவேற்கும்.
* பிறர் பொருளுக்கு ஆசைப்படுவது பயனில்லாத செயல்.
* வழி நடத்துபவர் மீது கவனமாகவும் பணிவாகவும் இருங்கள்.
* தினந்தோறும் புதிய செயல்களை கற்றுக் கொள்வது அறிவாளிக்கான அடையாளம்.
- பொன்மொழிகள்