நலம் தரும் நவதுர்கை
மே 22,2023,08:50  IST

சிவ வடிவங்களில் போகத்திற்கு அம்மனையும், யோகத்திற்கு தட்சிணாமூர்த்தியையும் கோபத்திற்கு துர்கையையும் சிறப்பாக குறிப்பிடுவர். துர்கை என்ற சொல்லிற்கு துர் என்றால் தீமை. தீமையை அழிப்பவள் என்றும், யாராலும் வெல்லமுடியாதவள், வெற்றிக்குரியவள் என பொருள் கொள்வர். பெங்களூரு நீயு பாகலுார் லேஅவுட் சாலையில் அமைந்துள்ள நவதுர்கை கோயிலுக்கு சென்றால் வெற்றி மீது வெற்றி வந்து சேரும் தெரியுமா உங்களுக்கு...
இக்கோயில் ஒரு காலத்தில் காடாக இருந்துள்ளது. இங்கிருந்த புற்று ஒன்றினை ஆடிமாதம் மட்டும் வழிபாடு செய்தனர். ஒருமுறை வழிபாட்டிற்கு வந்த சிறுமி மீது அருள் வந்து இங்கு கோயில் கொள்ள விரும்புகிறேன் என அம்மன் அருள்வாக்கு சொன்னாள். அதன் பலன் இன்று பெரிய கோயிலாக காட்சி தருகின்றது. கோயிலின் கருவறையில் நவதுர்கை என்ற திருநாமத்தில் அம்மன் அபய வரத கரங்களுடன் உடுக்கை, தாமரை மலர் ஏந்தி சாந்தசொரூபிணியாக அருள் செய்கிறாள். அவளை தரிசனம் செய்தாலே போதும் மனதில் ஒரு நிம்மதியும், எந்த நற்செயலை செய்தாலும் வெற்றி கிடைக்கும். துவாரசக்திகள், வைஷ்ணவி, தட்சிணாமூர்த்தி, பிரம்மா, சண்டிகேஸ்வரர், ஐயப்பன், மனைவியருடன் நவக்கிரகங்கள், விநாயகர், முருகன் வள்ளி தெய்வானை சன்னதிகளும் உள்ளன. இங்கு விசித்திரமான வழிபாடு ஒன்று கடைப்பிடிக்கப் படுகிறது. பூட்டு வாங்கி கருவறைக்கு பின்புறம் உள்ள கம்பிகளில் மாட்டி விட்டோம் என்றால் வரும் பிரச்னை வந்த இடம் தெரியாமல் போய்விடும். நவராத்திரி நாட்களில் ஒவ்வொரு நாளும் கோயிலுக்கு எதிரேயுள்ள அரசமர விநாயகர்,
நாகர்களுக்கு கிரகம், பித்ருதோஷங்கள் உள்ளவர்கள் பாலாபிஷேகம் செய்து வழிபடுவதற்கு பரிகாரத்தலமாகவும் விளங்குகிறது இக்கோயில்.

எப்படி செல்வது: பெங்களூரு கே.கே. மார்க்கெட்டில் இருந்து 10 கி.மீ.,
விசேஷ நாள்: செவ்வாய், வெள்ளி பிரதோஷம், ஆடி மாதம் முழுவதும் புரட்டாசி நவராத்திரி
நேரம்: அதிகாலை 5:00 - 12:00 மணி; மாலை 5:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 96324 21802
அருகிலுள்ள தலம்: கம்பளி சுவாமிகள் சிவன் கோயில் 0.5 கி.மீ.,
நேரம்: அதிகாலை 5:00 -12:00 மணி; மாலை 5:00 - 7:00 மணி

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X