நபிகள் நாயகம் தோழர்களுடன் ஒருவரது வீட்டிற்கு சென்றார். அது குறுகலான இடம். முதலில் வந்தவர்கள் வீட்டினுள் அமர்ந்தனர். கடைசியாக வந்த ஜரீருக்கு இடம் இல்லை. அதனால் வாசலிலேயே உட்கார்ந்தார். அதைக் கண்ட நாயகம், தனது தோளில் இருந்த துண்டை கொடுத்து, ''இதன் மீது உட்காருங்கள்'' என்றார். அவரோ அதன் மீது உட்காராமல், ''நீங்கள் எவ்வாறு கண்ணியம் செய்தீர்களோ, அவ்வாறே இறைவனும் உங்களைக் கண்ணியம் செய்வானாக'' என துண்டை திருப்பிக்கொடுத்தார்.
அதற்கு அவர், ''மறுமை நாளின் மீது நம்பிக்கை கொண்டவர், தான் அமர்ந்து இருக்கும் சபையில் சகோதரர் வந்தால் அவர் கண்ணியம் செய்யட்டும்'' என்றார்.