'உறவினர்களுக்கும், வழிப்போக்கர்களுக்கும் அவரவருக்குரிய உரிமையை வழங்கிவிடுங்கள்' என்கிறது குர்ஆன். உறவினர்களுக்கு நாம் செய்வது சலுகை அல்ல. மாறாக அவர்களுக்கு நம்மீதுள்ள உரிமை (ஹக்) என்று குறிப்பிடுகிறது. பெற்றோர், பிள்ளைகள், கணவன், மனைவி, உறவினர், அண்டை வீட்டார், வழிப்போக்கர், அனாதைகள், ஏழைகள் ஆகியோருக்கு செய்ய வேண்டிய உதவிகளை 'அவர்களுக்கு நம்மீதுள்ள உரிமை' என்றே குறிப்பிடப்படுகிறது.