இவ்வுலகில் உயிர் வாழ பணம் தேவை. ஆனால் அதுவே வாழ்க்கையல்ல. பலரும் இதை அறியாமல் பணம் சேர்க்க பொய் பேசுவது, லஞ்சம், வட்டி வாங்குவது போன்ற தீய செயல்களில் ஈடுபடுகின்றனர்.
ஒருவர் மரணமடைந்தால், 'இவர் எவ்வளவு சொத்து சுகங்களைச் சேர்த்துவிட்டுச் சென்றுள்ளார்' என்கின்றனர். ஆனால் மண்ணறையில் வானவர்களோ, 'நீ மறுமை வாழ்விற்காக எதனைக் கொண்டு வந்துள்ளாய்?' என்கின்றனர்.
மறுமை வாழ்வை தேடிக்கொள்வதற்காகவே செல்வமும், செல்வாக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. கதீஜா, அபூபக்கர், அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப், உதுமான் கனி ஆகியோர் செல்வந்தர்களாக இருந்தனர். ஆனால் அவர்கள் செல்வத்தை நேசிக்காமல், தர்ம வழியில் செலவிட்டனர்.