கைபர் போரில் கிடைத்த வெற்றியுடன் நபிகள் நாயகம் மதீனாவுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த ஜாபரை சந்தித்தார். நீண்ட நாட்களுக்குப்பின் இருவரும் சந்தித்த வேளை. இருவரும் கட்டி அணைத்துக் கொண்டனர்.
''எதற்காக மகிழ்வது என்று எனக்கு தெரியவில்லையே. ஜாபரின் வருகைக்காகவா அல்லது கைபரின் வெற்றிக்காகவா'' என்றார். அந்த அளவிற்கு அவர் மீது மதிப்பு கொண்டிருந்தார்.