அடுத்தவர் குறையைச் சுட்டிக்காட்டும் போது, எடுத்த எடுப்பிலேயே அவரிடம் இருக்கும் எதிர்மறை விஷயங்களை சொல்லாதீர்கள். எல்லோரிடமும் ஏதோ ஒரு நல்லகுணம் இருக்கும். எனவே ஒருவரிடம் இருக்கும் நேர்மறை விஷயங்களை முதலில் சொல்லுங்கள். இப்படி செய்தால் கைமேல் பலன் உண்டு.
உதாரணமாக ஒருவர் அதிகாலை தொழுகைக்கு மட்டும் ஏனோ வரவில்லை. அவரிடம் 'நீங்கள் இப்படி செய்யலாமா' எனக் கேட்டால், அவர் அதையும் கைவிட்டுவிடுவார். எனவே முதலில் அவரிடம் உள்ள நல்ல குணங்களை கூறுங்கள். பின்னர் உங்களைப் போன்ற மனிதர் அதிகாலை தொழுகையை புறக்கணிக்கலாமா? என அறிவுரை கூறுங்கள். நிச்சயம் அவர் மாறுவார்.