உலகில் மிகவும் ஆச்சர்யமான விஷயம் எது தெரியுமா? நம் மனம். இது ஒருநாள் சிரிக்கும். ஒருநாள் வருந்தும். நாள்தோறும் இப்படி ஏதோ மாறுதல் நடந்துகொண்டிருக்கும். அந்த மனதிற்குள் கீழ்க்கண்ட விஷயங்களை கொண்டு செல்லுங்கள். மனமாற்றம் நல்லவிதமாக இருக்கும்.
* கடுகடுத்த முகத்தைப் புன்னகை முகமாக மாற்றுங்கள்.
* கஞ்சத்தனத்தைப் புறந்தள்ளி கருணை உள்ளத்துடன் நடந்துகொள்ளுங்கள்.
* கோபத்தை விட்டொழித்து சகிப்புத்தன்மையைக் கையாளுங்கள்.
* தலைக்கனத்தை அகற்றிவிட்டு தன்னம்பிக்கையை வளர்த்தெடுங்கள்.
* வாழ்க்கை கொஞ்ச நாள்களே. அதில் கவலைகளுக்கு இடம் கொடுக்காமல் வாழுங்கள்.