சிவனடியாரான திருநாவுக்கரசர் ''சென்றாடும் தீர்த்தம் ஆனார் தாமே'' என்றும், தாயுமானவர் ''மூர்த்தி, தலம், தீர்த்தம்'' முச்சிறப்புகளை கொண்டது கோயில் என்றும் தீர்த்தத்தின் சிறப்பினை சொல்வார்கள்.
ராமேஸ்வரம், கும்பகோணம் போன்ற தலங்கள் மூலம் தீர்த்தத்தின் சிறப்புகளை அறியலாம். அதுபோல முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்துாரில் காயத்ரி மந்திர எழுத்துக்களே 24 தீர்த்தங்களாக உள்ளன. அத்தீர்த்தங்களின் பெயர்கள் இதோ....
* நாழிக்கிணறு தீர்த்தம் (கந்த புஷ்கரணி)
* திருமகள் தீர்த்தம் - நாள்தோறும் சுப்பிரமணிய பெருமானுக்கு அபிஷேகத்தீர்த்தம் எடுக்கப்படுகிறது.
* சேது தீர்த்தம் - அனுமன் இலங்கைக்கு புறப்பட்ட இடம்.
* முகாரம்ப தீர்த்தம். (வதனாரம்ப தீர்த்தம்)
* தெய்வானை தீர்த்தம்
* சித்தர்கள் தீர்த்தம்
* திக்கு பாலகர் தீர்த்தம்
* பழைய காயத்ரி தீர்த்தம்
* சாவித்திரி தீர்த்தம்
* கலைமகள் தீர்த்தம்
* வெள்ளை யானை தீர்த்தம்
* வைரவர் தீர்த்தம்
* வள்ளியம்மை தீர்த்தம்
* துர்கை தோற்றுவித்த தீர்த்தம்
* ஞான தீர்த்தம்
* சத்திய தீர்த்தம்
* தர்ம தீர்த்தம்
* தவசிகள் தீர்த்தம்
* தேவர்கள் தீர்த்தம்
* பாவநாச தீர்த்தம்
* தசகங்கா தீர்த்தம்
* கந்த மாதன தீர்த்தம்
* மாத்ரு தீர்த்தம்
* பித்ருக்கள் தீர்த்தம்