* நல்ல மனம் கொண்டவர்களுக்கு, எல்லாம் நல்லதாகவே நடக்கும்.
* ஆணவத்தை கைவிட்டு ஆர்வமுடன் பணியில் ஈடுபடு.
* உணவிலும், உடையிலும் எளிமையாக இரு.
* மனிதர்களுக்குள் ஏற்றத்தாழ்வு இருக்கக் காரணம், அவரவர் செய்த பாவ புண்ணிங்களே.
* நல்லதோ கெட்டதோ அவரவர்க்குரிய வினைப் பயனை அனுபவித்தே ஆக வேண்டும்.
* இன்ப துன்பம் மாறி மாறி வரும். ஆனால் யாருக்கும் நிலைத்திருப்பதில்லை.
* உலகத்தின் உரிமையாளரான கடவுளைத் தவிர, வேறு யாராலும் நம்மைக் காப்பாற்ற முடியாது.
* சுவாசிப்பது மட்டுமல்ல, பிறருக்கு சேவை செய்வதுதான் வாழ்க்கை.
* குறிக்கோள் உடையவர்கள் மங்காத புகழுடன் வாழ்வர்.
* மனிதப்பிறவி மகத்தானது. நல்ல செயல்களை செய்து அதை பயன்படுத்திக்கொள்.
* துன்பத்தில் வருந்துபவர்களுக்கு உதவுவது உன் கடமை.
* உண்மை எது என்பதை கண்டறிந்து செயல்படுவதே விவேகம்.
* யாரிடமும் சண்டையிடாதே. உன்னை விமர்சிக்கும் இடத்தை விட்டு விலகிச்செல்.
* பணம் இல்லாமல் வாழ முடியாது. அதே சமயம் கஞ்சனாக இருக்காதே.
என்கிறார் ஷீரடி சாய்பாபா