* உற்சாகமுடன் வேலை செய்தால் களைப்பே வராது. ஆனால் வெற்றி வந்துவிடும்.
* பேச்சை விட செயலுக்கு முன்னுரிமை கொடு.
* கோபம் என்பது முட்டாள்தனத்தின் அறிகுறி.
* கடவுள் யாரையும் தண்டிக்க விரும்பமாட்டார். அவர் அன்பே உருவானவர்.
* ஒருபோதும் உணர்ச்சி வசப்படாதே. மீறினால் முடிவு எடுக்க முடியாமல் தடுமாறுவாய்.
* முடிந்தவரை அமைதியாக இரு. பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.
* பிறர் உன்னை எப்படி நடத்தினாலும் கவலைப்படாதே.
* பிறருக்கு புத்திமதி கூறும் முன், அத்தகுதி உன்னிடம் உள்ளதா என யோசி.
* ஒழுக்கம் என்பது வளர்ச்சிக்கான வழிமுறை.
* நேர்மையாக வாழ்ந்தால் பேரானந்தம் என்னும் பரிசு கிடைக்கும்.
* குறிக்கோளைப் பொறுத்தே உனது வாழ்வு அமையும்.
* நல்ல செயல்களை செய்தால் தானாகவே பாராட்டு வரும்.
* தன்னம்பிக்கை இருக்கும் இடத்தில் தயக்கம் இருக்காது.
* அறிவுக்கண் திறந்தால் வாழ்வில் வளர்ச்சி உண்டாகும்.
சொல்கிறார் ஸ்ரீஅன்னை