மே 26 வைகாசி 12: திருகண்ணபுரம் சவுரிராஜப்பெருமாள் கோயில் உற்ஸவம் ஆரம்பம். சிவகாசி விஸ்வநாதர் கோயிலில் சப்பரம் வீதியுலா, சோமாசிமாற நாயனார் குருபூஜை.
மே 27 வைகாசி 13: மதுரை கூடலழகர் காலை பல்லக்கிலும் இரவு சிம்ம வாகனத்தில் திருவீதியுலா. சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் ரிஷப சேவை. ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் தங்கதிருப்புளி வாகனத்தில் புறப்பாடு.
மே 28 வைகாசி 14: காளையார்கோவில் சிவபெருமான் திருக்கல்யாணம். இரவு யானை வாகனத்தில் பவனி. உத்தமர் கோயில் சிவபெருமான் ரிஷப வாகனத்தில் புறப்பாடு.
மே 29 வைகாசி 15: நாட்டரசன் கோட்டை கண்ணுடைய நாயகி வெள்ளி கேடய சப்பரத்தில் பவனி. பழநி முருகன் காமதேனு வாகனத்தில் புறப்பாடு.
மே 30 வைகாசி 16: அரியக்குடி சீனிவாசப்பெருமாள் கருட வாகனத்தில் பவனி. மாயவரம் மாயூரநாதர் திருகல்யாணம். திருவாடானை ஆதிரத்தினேஸ்வரர் இந்திர விமானத்தில் புறப்பாடு.
மே 31 வைகாசி 17: பழநி முருகன் ஆட்டுக்கிடா வாகனத்தில் புறப்பாடு. திருமோகூர் காளமேகப்பெருமாள் வைரச்சப்பரத்தில் பவனி. காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் உற்ஸவம் ஆரம்பம்.
ஜூன் 1 வைகாசி 18: முகூர்த்த நாள், பிரதோஷம். ராமலட்சுமண துவாதசி. அரியக்குடி சீனிவாசப் பெருமாள், காட்டுபருவூர் ஆதிகேசவப்பெருமாள் இத்தலங்களில் திருக்கல்யாணம்.