நலமாக வாழ வைப்பார் நாகராஜர்
மே 26,2023,13:30  IST

ஓம் நல்அரவமே போற்றி
ஓம் நாக தேவதையே போற்றி
ஓம் அரசடியருள்வோரே போற்றி
ஓம் அபயமளிப்போரே போற்றி
ஓம் அன்பர்க்கு எளியோரே போற்றி
ஓம் அடங்காரின் அழிவே போற்றி
ஓம் அரன் அணியரே போற்றி
ஓம் அபிஷேகப் பிரியரே போற்றி
ஓம் அனந்தனே போற்றி
ஓம் ஆதிசேஷனே போற்றி
ஓம் ஆடியருள்பவரே போற்றி
ஓம் ஆனைமுகன் அருகிலிருப்பவரே போற்றி
ஓம் ஆலமுடையவரே போற்றி
ஓம் ஆயுதமானவரே போற்றி
ஓம் இசைப்பிரியரே போற்றி
ஓம் இறையருள் கூட்டுவிப்போரே போற்றி
ஓம் ஈறிலாரே போற்றி
ஓம் ஈர்க்கும் வடிவினரே போற்றி
ஓம் ஊர்ந்து வருபவரே போற்றி
ஓம் ஊர்தோறும் அருள்பவரே போற்றி
ஓம் எங்குமிருப்பவரே போற்றி
ஓம் எளிதில் மகிழ்பவரே போற்றி
ஓம் எண்ணிலாத் தலையரே போற்றி
ஓம் ஏற்றம் அளிப்பவரே போற்றி
ஓம் ஒப்பில்லாதவரே போற்றி
ஓம் ஒன்றுவிப்பவரே போற்றி
ஓம் கம்பளரே போற்றி
ஓம் கத்ரு பத்ரரே போற்றி
ஓம் கம்பீரரே போற்றி
ஓம் கருடனைப் பணிந்தவரே போற்றி-
ஓம் காணற்கினியவரே போற்றி
ஓம் கயவரை அழிப்பவரே போற்றி
ஓம் காளிங்கரே போற்றி
ஓம் கண்ணனுக்கடங்கியவரே போற்றி
ஓம் கார்க்கோடகரே போற்றி
ஓம் காவலனுக்கு ஆயுதரே போற்றி
ஓம் கிரீடமானவரே போற்றி
ஓம் கிரகதோஷ நாசகரே போற்றி
ஓம் குங்குமப் பிரியரே போற்றி
ஓம் குலக் காவலரே போற்றி
ஓம் கேது சிரமானவரே போற்றி
ஓம் கோள்வினை பொடிப்பவரே போற்றி
ஓம் சங்கரர் அணிகலனே போற்றி
ஓம் சப்த நாயகரே போற்றி
ஓம் சக்தி வடிவினரே போற்றி
ஓம் சங்கரனை அணைவோரே போற்றி
ஓம் சட்டை உரிப்பவரே போற்றி
ஓம் சத்தியத்துக்கடங்கியவரே போற்றி
ஓம் சிவதாசரே போற்றி
ஓம் சிவனருள் பெற்றவரே போற்றி
ஓம் சுகுமார தாசரே போற்றி
ஓம் சுப்ரமண்ய ஷேத்திரரே போற்றி
ஓம் சீறுபவரே போற்றி
ஓம் சீதள உடல் பெற்றவரே போற்றி
ஓம் தட்சகரே போற்றி
ஓம் ததிகர்ணரே போற்றி
ஓம் தீனர் காவலரே போற்றி
ஓம் தீயோர்க்கு நஞ்சே போற்றி
ஓம் துதிப்பிரியரே போற்றி
ஓம் துன்பம் துடைப்பவரே போற்றி
ஓம் நமனாரின் சேவகரே போற்றி
ஓம் நல்லோரைக் காப்போரே போற்றி
ஓம் நாக லட்சுமியே போற்றி
ஓம் நாக ராஜரே போற்றி
ஓம் நாக கன்னியரே போற்றி
ஓம் நாடப்படுவோரே போற்றி
ஓம் நாக நாகினியரே போற்றி
ஓம் நாக பஞ்சமித் தேவரே போற்றி
ஓம் நாதத்தில் வசிப்பவரே போற்றி
ஓம் நாதனைப் பணிந்தவே போற்றி
ஓம் நீள் வடிவினரே போற்றி
ஓம் நொடியில் அருள்பவரே போற்றி
ஓம் பஞ்சமித் தோன்றலே போற்றி
ஓம் பரனருள் பெற்றவரே போற்றி
ஓம் பத்மனே போற்றி
ஓம் பளபளக்கும் மேனியரே போற்றி
ஓம் படை நடுக்குவிப்பவரே போற்றி
ஓம் பல்வடிவில் அருள்பவரே போற்றி
ஓம் பால் பிரியரே போற்றி
ஓம் பாடலில் மயங்குபவரே போற்றி-
ஓம் பஞ்சபூதத் தேவரே போற்றி
ஓம் பாதாள வாசரே போற்றி
ஓம் புண்ணியரே போற்றி
ஓம் புற்றில் உறைபவரே போற்றி
ஓம் புகழ் படைத்தவரே போற்றி
ஓம் பூஜிக்கப்படுபவரே போற்றி
ஓம் புனிதரே போற்றி
ஓம் பூவுலகின் தேவரே போற்றி
ஓம் மரத்தடி இருப்பவரே போற்றி
ஓம் மகுடிக்கு அடங்குபவரே போற்றி
ஓம் மகளிர் தேவரே போற்றி
ஓம் மஞ்சளில் மகிழ்பவரே போற்றி
ஓம் மகவு அளிப்பவரே போற்றி
ஓம் மலடு நீக்குபவரே போற்றி
ஓம் மணிபத்ரனே போற்றி
ஓம் மால் ஆசனனே போற்றி
ஓம் மானஸையே போற்றி
ஓம் மால் அருள் பெற்றவரே போற்றி
ஓம் முட்டை ஏற்போரே போற்றி
ஓம் முக்கியத் தேவரே போற்றி
ஓம் ராகு உடலானவரே போற்றி
ஓம் ருத்ரன் உடனிருப்பவரே போற்றி
ஓம் வாசுகியே போற்றி
ஓம் வளைந்து வருவோரே போற்றி
ஓம் வணங்க வைப்பவரே போற்றி
ஓம் வரம் தருபவரே போற்றி
ஓம் வலிமை மிக்கவரே போற்றி
ஓம் வாழ்வு அருள்பவரே போற்றி

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X