உண்மையாக வாழ்பவர்கள் உலகில் சிலரே. ஏன் என்றால் முன்பு வீடு நிறைய மனிதர்கள் இருந்தார்கள். பொருட்கள் குறைவாக இருக்கும். இப்போது வீடு நிறைய பொருட்கள் இருக்கின்றன. மனிதர்கள்தான் குறைவாக உள்ளனர். அதிலும் யாருடைய மனதிலும் அமைதி இல்லை. எதற்கு முக்கியத்துவம் தர வேண்டும் என தெரியாததே இதற்கு காரணம். தன் மீது அன்பு காட்டுபவர்கள், உறவினர்கள், நண்பர்கள் என யாருக்கும் முக்கியத்துவம் தருவதில்லை. மாறாக அழியும் பொருட்கள் மீது ஆசை வைக்கின்றனர். இவர்கள் திருந்தலாமே...