மனிதனது ஆசைகளை நிறைவு செய்யும் வகையில் உள்ளது மறுமையின் வீடு. அந்த வீட்டில் ஒருவர் நம்பிக்கையை இழந்தால், ஆசைகளை நெறிப்படுத்த முடியாமல் தடுமாறுவார். இதன் விளைவாக தன்னைச் சுற்றி இருப்பவர்களுடன் மோதல் போக்கை கடைபிடிப்பார். திரும்பிய திசைகள் எங்கும் பிரச்னையை உண்டாக்குவார். குழப்பம், நெருக்கடி அதிகரிக்கும். இந்த நிலைக்கு ஒருவர் வந்துவிட்டால் அவரது வாழ்வு எப்படி இருக்கும்? நரகமாகவே இருக்கும். எனவே பேராசையில்லாமல் வாழுங்கள்.