பூமியில் கிடைக்கும் கனிமங்களை போல், மனிதர்களுக்கும் தனித்தனி பண்புகள் உண்டு. சிலர் மென்மையாக இருப்பர். வேறு சிலரோ கரடுமுரடாக இருப்பர். வீட்டில் மனைவியுடன் சண்டை.என்ன செய்வது என நண்பரிடம் ஆலோசனை கேட்டுப்பாருங்கள். கரடுமுரடானவராக இருந்தால், 'நீ ஆண் மகன். விட்டுக்கொடுக்காதே' என்பார். அதுவே மென்மையானவராக இருந்தால், ''விட்டுக்கொடு. அனுசரித்துச் செல். அவள் வேறு யாருமல்ல. உன் மனைவிதானே'' என சொல்வார். மனிதர்களின் இயல்புகளை புரிந்துகொள்ளுங்கள். எனவே விட்டுக் கொடுங்கள். மகிழ்ச்சியாக வாழுங்கள்.