* கோயிலில் குளத்து மீன்களுக்கு உணவிட்டால், முன்வினைப்பாவம் தீரும்.
* கடவுள் வழிபாடு, பூஜையை கிழக்கு அல்லது வடக்கு திசையை நோக்கிச் செய்வது சிறப்பு.
* வீட்டைக் காப்பது நிலைப்படி. அதனால்தான் அதை கடவுளாக கருதி மஞ்சள், குங்குமம் இட்டு வழிபடுகிறோம்.
* அருகில் உள்ள கோயிலில் உழவாரப் பணி செய்யுங்கள். உடல்நல பிரச்னை சரியாகும்.
* வளர்பிறை ஏகாதசியன்று கிருஷ்ணருக்கு அவல், பொரி, பாயசம் வைத்து வழிபட்டால் இழந்த பொருளை பெறலாம்.
* வாயில்லா ஜீவன்களுக்கு உணவு கொடுத்தால், தொழிலில் லாபம் இரட்டிப்பாகும்.
* திங்களன்று விநாயகரை வணங்கினால் கெட்ட கனவு வராது.
* எந்தவொரு பொருள், பணத்தை வலது கையால் கொடுத்து, வாங்கினால் அது நாளுக்கு நாள் பெருகும்.
* குழந்தை இல்லாதவர்கள் வெள்ளியன்று பசுவுக்கு அகத்திக்கீரை, வாழைப்பழம் கொடுத்தால் விரைவில் சுபச்செய்தி வரும்.
* திருவண்ணாமலை சென்று வந்தால், பிள்ளைகளுக்கு சீக்கிரமே நல்ல இடத்தில் திருமணம் அமையும்.