கல்வியறிவு பற்றி நபிகள்நாயகம்(ஸல்) அவர்கள் தரும் சிறப்பு செய்திகளைக் கேட்போமா!
* ஒருவர் கல்வியைத் தேடி பயணம் செய்வாராயின் அவரை அல்லாஹ் சுவனத்தின் (சொர்க்கம்) பால் கொண்டு சேர்க்கிறான்.
* மாணவர்களின் செயலை (கல்வி கற்றலை) உவந்து, வானவர்கள் தங்கள் இறக்கைகளை பூமியில் விரித்து வைக்கின்றார்கள்.
* கல்வியின் ஒரு பகுதியை ஒருவர் கற்பது, உலகத்தையும் உலகப்பொருள்களையும் விட அவருக்கு சிறந்ததாகும்.
* கல்வி கற்பது முஸ்லிம்கள் அனைவருக்கும் கடமையாகும்.
* கல்வியறிவு என்பது ஒரு கருவூலப்பெட்டகம். இதன் திறவுகோல் கேள்வியாகும். எனவே கேள்வி கேளுங்கள். அவ்வாறு வினவுவதால், நால்வருக்கு கூலி கிடைக்கின்றது. வினவுபவர், அறிஞர், அதனைச் செவிமடுப்பவர், இவர்களின் மேல் அன்பு வைத்திருப்பவர்.
* தன்னுடைய அறிவின்மை மீது அறிவிலியும், தன்னுடைய அறிவின் மீது அறிஞனும் பேசாமலிருந்து விடுவது சரியன்று.
* ஒரு அறிஞரின் அவையில் வீற்றிருப்பது, ஆயிரம் ரக அத்துக்கள் தொழுவதை விட, ஆயிரம் நோயாளிகளுக்கு ஆறுதல் கூறுவதையும் விட, ஆயிரம் ஜனாஸாக்களில் கலந்து கொள்தையும் விட சிறப்பு மிகுந்ததாகும்.
* இஸ்லாமை உயிர்ப்பிக்கும் லட்சிய நோக்கோடு ஒருவர் கற்கும் நிலையில், அவரை இறப்பு தழுவினால் சுவனத்தில் அவருக்கும் அன்பியாக்களுக்கும் இடையே ஒரேயொரு படித்தரம் மட்டுமே வித்தியாசமிருக்கும்.