திருமண வீடுகளில் "முப்புரிநூல்' பற்றி பேசுவார்கள். ""கணவன், மனைவி, கர்த்தர்' ஆகிய மூன்றுபேரும் இணைந்ததே முப்புரிநூல். கணவனுக்கும், மனைவிக்கும் இடையே ஆழமான நட்பும் சிநேகிதமும் இருக்க
வேண்டும். மட்டுமல்லாமல் அவர்களுடைய குடும்ப வாழ்க்கை கிறிஸ்துவோடு இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இரண்டு செடிகளை ஒன்றோடொன்று ஒட்டவைத்தோம் என்றால் அது ஒரு புதிய செடியை உருவாக்குகிறது. ஒட்டுமாம்பழத்தின் சுவை மிக ருசியானது. அதைப்போல ஒருவரோடு ஒருவர் இணைந்து ஒரு மனமாகும்போது, சிநேகிதமாக அன்பின் ஐக்கியம் கொள்ளும்போது அந்தக் குடும்பம் மிக மேன்மையுள்ளதாய் இருக்கும். அதோடு நின்றுவிடக்கூடாது. அந்த ஒட்டுச்செடியானது திராட்சை செடியாகிய கிறிஸ்துவோடு கூட ஒட்ட வைக்கப்பட வேண்டும். அவரே மெய்யான திராட்சை செடி. நாம் அவரில் நிலைத்திருப்போம் என்றால் திரளான கனிகளைக் கொடுப்போம்.
அந்தக்கனி சுவையுள்ளதாய் விளங்கும்.
உங்களுடைய வாழ்க்கையில் உ<ங்களோடு இணைந்து ஜெபிக்கக்கூடிய ஜெப நண்பர்களை உருவாக்கிக் கொள்ளுங்கள். உண்மையாய், ஒருவருடைய பாரத்தை ஒருவர் சுமந்து ஒருவருக்கொருவர் மன்றாடுகிற சிநேகிதர்கள் அவசியம்.
""முப்புரிநூல் சீக்கிரமாய் அறாது'' (பிர.4:12) என்ற வசனம் இங்கே குறிப்பிடத்தக்கது.
***