கிறிஸ்துமஸ் பற்றிய தகவல்கள்
டிசம்பர் 27,2013,14:19  IST

* கதவைத் திறந்து கிறிஸ்துமஸ் வாழ்த்து: பெர்லின் நாடு இரண்டாகப் பிரிந்திருந்த காலத்தில் இரண்டு நாடுகளுக்கும் நடுவே ஒரு சுவர் அமைக்கப்பட்டிருந்தது. சுவரின் நடுவே ஒரு கதவு அமைக்கப்பட்டது. கிறிஸ்துமஸ் அன்று மட்டுமே, இந்தக் கதவு திறக்கப்பட்டு இருநாட்டு மக்களும் வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வர். மற்ற நாட்களில் இந்தக் கதவு மூடப்பட்டிருக்கும்.

* மலர் அலங்காரம்: இங்கிலாந்தில் கிறிஸ்துமஸ் மரம் அறிமுகப்படுத்துவதற்கு முன்னதாகவே ஜெர்மனி, ஆஸ்திரியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் "பிர்' என்ற மரத்தை அலங்கரிக்கும் வழக்கம் இருந்தது. இருப்பினும், மரங்களில் இலைகள் மற்றும் மலர்களைக் கட்டி அலங்கரிக்கும் வழக்கம் இங்கிலாந்தில் தான் 1841ம் ஆண்டில் ஆரம்பித்தது. அல்பெர்டினால் என்ற அரசன் முதன்முதலாக கிறிஸ்துமஸ் மரத்தை நட்டார்.

* 20நாள் கொண்டாட்டம்: ஸ்காட்லாந்து நாட்டில் 20 நாட்கள் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படும். "யூல்' எனப்படும் டிசம்பர் 18ம் தேதியே கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் துவங்கி ஜனவரி 6ம் தேதி வரை நடக்கும். கடைசிநாள் விழாவை "எபிபனி' என்கிறார்கள்.

* போக்குவரத்து நிறுத்தம்: பின்லாந்து நாட்டில் கிறிஸ்துமஸ் அன்று போக்குவரத்து நிறுத்தப்பட்டு விடும். அந்நாட்டு மக்கள் தேவாலயங்களுக்குச் செல்ல சறுக்கு வண்டியைப் பயன்படுத்துகிறார்கள். அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் பண்டிகையன்று மக்கள் மின்னல் வேகத்தில் தங்கள் வாகனங்களை செலுத்துவது வழக்கம். அவ்வாறு விதிகளை மீறும் வாகனங்களின் மீது போலீசார் கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகளை ஒட்டி அனுப்புகிறார்கள்.

* இலை இல்லாத மரம்: ஸ்வீடன் நாட்டில் மக்கள் கிறிஸ்துமஸ் மரங்களை நடும்போது பச்சை இலைகளைப் பயன்படுத்துவதில்லை. ஏனெனில், அந்நாட்டில் யாராவது இறந்து போனால் பச்சை மரங்களை சமாதி அருகில் நடுவது உண்டு. இறப்பின் சின்னமாக பச்சை மரம் இருப்பதால் கிறிஸ்துமஸ் மரங்களுக்கு முழுக்க முழுக்க பூக்களையே பயன்படுத்தி அலங்கரிக்கிறார்கள்.

* கிறிஸ்துமஸ் குடில்: இயேசுநாதர் பிறந்ததைப் போல சித்தரிக்கும் கிறிஸ்துமஸ் குடில்கள் விதவிதமான அலங்காரங்களுடன் உலகெங்கும் அமைக்கப்படுகின்றன. இதை முதன்முதலாக புனித பிரான்சிஸ் என்பவர் 1722ம் ஆண்டில் அறிமுகப்படுத்தினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X