மது அருந்துபவர்களுடன் யுத்தம் செய்யுங்கள்!
ஆகஸ்ட் 11,2015,12:52  IST

இன்று மதுக்கடைகள் பெருகியுள்ளது. இஸ்லாமுக்கு அதில் அறவே விருப்பமில்லை. நபிகள் நாயகம், மது அருந்துதலின் தீமையைப் பற்றி மிகக் கடுமையாக எச்சரித்துள்ளார்.
மதுப்பழக்கம் வாழும் காலத்தில் மட்டுமல்ல, வாழ்க்கைக்குப் பிறகும் கடும் துயரங்களை நமக்குத் தரும். ஒருமுறை, நபிகள் நாயகத்திடம், தைலம் ஷர்ரி (ரலி) என்ற தோழர் வந்தார். "இறை தூதே! நாங்கள் குளிர்பிரதேசத்தில் வசிப்பவர்கள். குளிரைப் போக்க மதுவை அருந்துகிறோம்,'' என்றார்.
அவரிடம் நாயகம், ""அந்த மதுவில் போதை இருக்கிறதா?'' என்றார்.
"ஆம்' என பதிலளித்த தோழரிடம், "அப்படியானால், நீங்கள் அதனைக் குடிக்கக்கூடாது,''என்றார் நாயகம்.
"சரி...நான் குடிக்கவில்லை. ஆனால், மக்கள் கேட்க மாட்டார்களே,'' என்று தோழர்
சொன்னதற்கு, "அப்படியானால் குடிப்பவர்களுடன் நீங்கள் யுத்தம் செய்யுங்கள்,'' என்றார் நாயகம்.
குடிப்பவர்களுடன் சண்டை போட்டாவது அவர்களைத் திருத்த வேண்டும் என்பது நபிகளாரின் கொள்கை.
மதுபானம் அருந்துவது பாவங்கள் அனைத்திற்கும் தாயாகும். மது அருந்து பவன் தொழுகையை விட்டுவிடுவான்.
ஒருமுறை மது அருந்திய ஒருவரை நபிகள் நாயகத்தின் முன் கொண்டு வந்தார்கள். நாயகம் அவர்களிடம், ""இவரை அடியுங்கள்,'' என்றார். சிலர் அவரை கையால் அடித்தனர். சிலர் துணியை முறுக்கி அடித்தனர். சிலர் செருப்பால் அடித்தனர்.
மது அருந்துவோருக்கு இவ்வுலகில் மட்டுமல்ல, மறுவுலகிலும் கடும் தண்டனை கிடைக்கும் என்கிறார் நாயகம்.
"மது அருந்திய நிலையில் ஒருவனது உயிர் பிரியுமானால், இறைவன் அவனுக்கு கவுத்தா என்னும் நதியில் இருந்து நீரைப் புகட்டுவான். "கவுத்தா' என்றால், விலைமாதின் மர்ம ஸ்தானத்தில் இருந்து வெளிப்படும் நீர்,'' என்று அவர் சொல்கிறார்.
அது மட்டுமல்ல! "மது அருந்துபவன் இறந்தால், அவனுக்கு மறுமையில், நரகவாசியின் சீழ், வியர்வை ஆகியவற்றை அல்லாஹ் அருந்தச் செய்வான்' என்றும் குர்ஆன் எச்சரிக்கிறது.
யோசியுங்கள்! தேவைதானா இன்னும் மது என்னும் கொடிய விஷம்! மதுவை இனி கண்ணால் கூட பார்ப்பதில்லை என்று
உறுதியெடுங்கள்.

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X