உள்ளூர் செய்திகள்

நம்பிக்கை வேண்டும்

மருத்துவரான டேவிட் ஒருநாள் வீட்டு மொட்டை மாடியில் தியானத்தில் இருந்தார். அப்போது அருகில் பாம்பு இருப்பதை அவர் கவனிக்கவில்லை. சிறிது நேரம் சென்றது. பாம்பு மெல்ல அவரை சுற்ற ஆரம்பித்தது. இதை அறிந்தவர் செய்வதறியாமல் திகைத்தார். திடீரென அவருக்கு ஒரு யோசனை பிறந்தது. துளிகூட அசையாமல் அப்படியே அமர்ந்திருந்தார். ஒருவழியாக நம்பிக்கையை வரவழைத்து பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தார். அவ்வளவுதான் சிறிது நேரத்தில் பாம்பு அவரை விட்டு விலகி சென்றது. பார்த்தீர்களா... என்னதான் இக்கட்டான நேரமாக இருந்தாலும், ஆண்டவர் மீது நம்பிக்கை வையுங்கள். உங்களது பிரச்னை தீர்ந்துவிடும்.