மனதை ஆளட்டும் அன்பு
UPDATED : ஆக 17, 2022 | ADDED : ஆக 17, 2022
ஆரஞ்சுப் பழத்தை பிழிந்து கொண்டிருந்தாள் அம்மா. அதை கவனித்த சார்லஸ், ''அம்மா... இதை இன்னும் பிழிந்தால் ஆப்பிள் ஜூஸ் வருமா'' எனக்கேட்டான். அதற்கு அவர் சிரித்துக்கொண்டே, ''ஆரஞ்சுப்பழத்தில் இருந்து ஆரஞ்சு ஜூஸ்தான் வரும்'' என்றார். இதை சற்று சிந்தித்து பாருங்கள். உங்களை யாரோ ஒருவர் புண்படுத்துகிறார். அப்போது கோபம், வெறுப்பு, பயம் என வெளிப்படுகிறது. இதற்கு என்ன அர்த்தம்? உங்கள் மனதிலும் இதுதானே உள்ளது. ஆம். நம்மிடம் அன்பு இருந்தால், பிறர் தவறு செய்தால்கூட அன்புதான் வெளிப்படும். இப்படி மனம் முழுவதும் அன்பை நிரப்பினால், சீரான வாழ்க்கையை வாழலாம்.