பிறவி மயக்கம் தீர மருந்து சாப்பிடுங்க...
அருமருந்தொரு தனிமருந்திதுஅம்பலத்தே கண்டேனேதிருமருந்துடன் வருமருந்துதில்லை அம்பலத்தாடும் மருந்துஇருவினைகள் அறுக்கும் மருந்துஏழை அடியார்க்கு இரங்கும் மருந்துகொன்றை தும்பை அணிந்த மருந்துகோவை மீதில் படர்ந்த மருந்துமன்றுளே நின்றாடும் மருந்துமாணிக்க வாசகர் கண்ட மருந்துஇந்திர ரானவர் வானவர் போற்றும் இருடிகள் தமக் கெட்டா மருந்துசந்திர சூரியர் காணா மருந்துதானே முளைத்துத் தழைத்த மருந்துதிரித் தித்தித்தியென்று ஆடும் மருந்துதேவாதி மூவர்கள் காணா மருந்துகருத்தைத் திருத்தி இருத்தும் மருந்துகாலனைக் காலால் உதைத்த மருந்துகோயில் என்றால் அது கடலுார் சிதம்பரத்தை குறிக்கும். அங்கு எழுந்தருளி இருக்கும் நடராஜரின் சிறப்பினை எண்ணற்ற அருளாளர்கள் பாடல்கள் பாடி அதன் மூலம் நிருப்பித்துள்ளனர். அவையாவும் தெய்வீகமானவை. நடராஜர் மீது அவர்களால் இயற்றப்பட்ட பாடல்களை நியமப்படி ஒருவர் தொடர்ந்து செய்து வருவாரேயானால் அவர் நினைத்து நடக்கும். சிதம்பரம் அருகே உள்ள சீர்காழி தலத்தில் பிறந்தவர் முத்துத்தாண்டவர். இசைத்துறையின் பிதாமகர் என போற்றப்பட்டவர். இவர் நாள்தோறும் சிதம்பரம் சென்று நடராஜரை தரிசனம் செய்து வருவதை வழக்கமாக கொண்டார். ஒரு நாள் கோயிலுக்கு வரும் வழியில் பாம்பு ஒன்று அவரைத் தீண்டியது. அவ்விஷம் நீங்க இந்த பாடலை பாடிய போது விஷம் தானாக இறங்கியது. பிறவி என்னும் விஷத்தை போக்கும் நடராஜர் மருத்துவராகவும் இருக்கிறார் என்பது பாடலின் வெளிப்படையான பொருள். பாடலை படியுங்கள். பிறவி மயக்கத்தில் இருந்து விடுபடுங்கள்.