உள்ளூர் செய்திகள்

கேளுங்க சொல்கிறோம்!

விநாயகர் இல்லாமல் தனியாக உள்ள அரசமரத்தை சுற்றலாமா?ஏ.எஸ்.ராஜேந்திரன் விருதுநகர்தெய்வீக சக்தி நிறைந்தது அரசமரம். விநாயகர் இன்றி தனியாக இருந்தாலும், சுற்றி வந்தால் புண்ணியமே. இதை போல கோமாதாவான பசுவை எங்கு சுற்றி வந்தாலும் நன்மையே. இரண்டாவது கர்ப்பம் தரித்த பெண்ணுக்கு வளைகாப்பு நடத்தலாமா?ப.உமா மகேஸ்வரி. நெய்வேலிஇல்லை. முதல் கர்ப்பத்தின் போது வளைகாப்பு நடத்தவில்லையெனில் இப்போது நடத்தலாம்.சுமாராகப் படிக்கும் என் மகன் கல்வியில் முன்னேற பரிகாரம் கூறுங்கள்.ஆர்.லட்சுமி, நங்கநல்லுார் 'சுமாராகப் படிக்கிறான்' என மகன் காதில்விழும்படி பேசாமலிருப்பது முதல் பரிகாரம். பெற்றோர் தரும் ஊக்கம், ஒத்துழைப்பே கல்வி வளர்ச்சிக்கான முதல்படி. கல்விக்கடவுள் சரஸ்வதியை புதன்கிழமை அன்று வழிபடுங்கள்.* சிந்தாமணி விநாயகர் என்பதன் பொருள் என்ன?என்.பி.லட்சுமி, மதுரைகாமதேனு, கற்பகவிருட்சம் போல நினைத்ததைத் தரும் ரத்தினத்திற்கு 'சிந்தாமணி' என பெயர். இதைப் போல பக்தர்களின் விருப்பம் அறிந்து நிறைவேற்றுபவர் 'சிந்தாமணி விநாயகர்'. * சுமங்கலியாக இறந்தவருக்கு கணவர் திவசம் செய்யலாமா?சி.எம்.வைத்தியநாதன்,போரூர்புத்திரன் என்பதற்கு 'நரகத்திற்கு செல்லாமல் காப்பாற்றுபவன்' என பொருள். அதாவது மகன் செய்யும் பிதுர் காரியங்கள் மூலம் இறந்த உயிர் மோட்சத்தை அடைகிறது. இதற்கான முதல் அதிகாரம் மூத்த மகனுக்கே உண்டு. பிள்ளைகள் இல்லாவிட்டால் கணவர் செய்யலாம்.உண்ணா நோன்பு, பேசாநோன்பு - ஒப்பிடுங்கள்.வி.சாமிநாதன், ஆதம்பாக்கம்உண்ணாநோன்பு என்பது சாப்பிடாத விரதம், பேசாநோன்பு என்பது மவுன விரதம். இரண்டும் ஆன்மிக சிந்தனை வளர துணைபுரிகின்றன. விரதத்தால் உடலும், மவுனத்தால் மனமும் துாய்மை பெறுகின்றன.