மனப்பாடப்பகுதி
UPDATED : நவ 23, 2018 | ADDED : நவ 23, 2018
காலநேமி காலனே! கணக்கிலாத கீர்த்தியாய்!ஞாலமேழும் உண்டு பண்டொர் பாலனாய பண்பனே!வேலை வேவ வில்வளைத்த வெல்சினத்த வீர! நின்பாலராய பத்தர் சித்தம் முத்தி செய்யும் மூர்த்தியே!பொருள்: காலத்தை நிர்ணயிக்கும் காலனுக் கும் காலனாக இருப் பவனே! அளவற்ற புகழ் கொண்டவனே! உலகம் ஏழினையும் உண்ட கண்ணனே! ஆலிலையில் துயிலும் பாலகனே! கடலும் வற்றும் விதத்தில் கோபத்துடன் வில்லை வளைத்த வீரனே! சரணடைந்த அடியவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுபவனே! உன்னைப் போற்றுகிறேன்.