பிரசாதம் இது பிரமாதம் - சாம்பார் சாதம்
என்ன தேவைஅரிசி - 100 கிராம்துவரம் பருப்பு - 50 கிராம்தக்காளி - 1பச்சை மிளகாய் - 2மிளகாய் வத்தல் - 5தனியா - 2 டீஸ்பூன்கசகசா - 1/2 டீஸ்பூன்மிளகு - 4வெந்தயம் - சிறிதளவுதேங்காய் - 1 துண்டுபுளி - சிறிதளவுகறிவேப்பிலை - 1இணுக்குமஞ்சள் பொடி - 1/4 டீஸ்பூன்கடுகு - 1/4 டீஸ்பூன்எண்ணெய், நெய் கலந்து - 100 கிராம்கடலைப் பருப்பு - 1டீஸ்பூன்சாம்பார் வெங்காயம் - 5உப்பு - தேவையான அளவுஎப்படி செய்வதுபச்சை மிளகாயைக் கீறி தக்காளிப் பழத்தை துண்டுகள் செய்யவும். வாணலியில் சிறிது கலப்பு நெய் விட்டுக் காய்ந்தபின் மிளகாய் வத்தல், தனியா, கடலைப் பருப்பு, மிளகு, கசகசா, வெந்தயம் முதலியவற்றை தனித்தனியாக வதக்கி, தேங்காய் சேர்த்து சற்றுக் கரகரப்பாக தண்ணீர் விட்டு அரைக்கவும். மிளகாய், தக்காளி, வெங்காயத்தை வதக்கவும். பின்பு கடுகைத் தாளிக்கவும். அரிசி, பருப்பை வேகவைக்கவும்.ஒரு பாத்திரத்தில் புளியை கரைத்து உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து அடுப்பில் வைக்கவும். சற்று கொதித்ததும் மசாலா சேர்க்கவும். பின்னும் சற்றுக் கொதித்ததும் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், தாளித்த கறிவேப்பிலை, சாதம், கலப்பு நெய்யைச் சேர்த்துப் பாத்திரத்தில் பிடிக்காமல் கிளற சாம்பார் சாதம் ரெடி.