உள்ளூர் செய்திகள்

வாழ்க்கையில் முன்னேற... இன்றே தொடங்குங்கள்!

விஜயம் என்றால் வெற்றி. வாழ்க்கையில் ஜெயித்து படிப்படியாக முன்னேற்றம் அடைவதற்கு, என்ன தேவையோ அதை விஜயதசமி அன்று தொடங்கி தான் பாருங்களேன்! உங்களது வாழ்க்கை ஒரு படி மேலே உயர்ந்து இருக்கும். முயற்சி செய்து பாருங்கள் முன்னேற்றம் உங்கள் கையில்...* குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்க பள்ளியில் சேர்க்கும் முன்பாக வித்யாரம்பம் செய்யுங்கள்.* புதிய தொழில் தொடங்குங்கள். நல்ல வளர்ச்சி காண்பீர்கள். * முயற்சித்த காரியங்கள் தடைபடுகிறதா? இன்று மீண்டும் தொடங்குங்கள். வெற்றி அடைவீர்கள். * வீட்டில் அரிசி,பருப்பு போன்றவற்றை புதியதாக வாங்கிச் சேருங்கள். தானியங்களுக்கு ஆண்டு முழுவதும் குறைவிருக்காது.* நற்பண்பு வளர வேண்டுமா... தீய எண்ணத்தை இன்றே விட்டு விடுங்கள். * பணக்கஷ்டமா... சேமிக்கும் வழக்கத்தை உருவாக்குங்கள்.