இந்த வாரம் என்ன
நவ.24 கார்த்திகை 8: திருப்பாணாழ்வார் திருநட்சத்திரம், திருவண்ணாமலை சிவன் தெப்பம், மன்னார்குடி ராஜகோபால சுவாமி புறப்பாடு, வாஸ்து நாள், மனை, மடம், ஆலயம், கிணறு வாஸ்து பூஜை செய்ய நல்ல நேரம் காலை 11:29 - 12:05 மணிநவ.25 கார்த்திகை 9: முகூர்த்த நாள், திருவண்ணாமலை சிவன் கைலாச கிரிபிரதட்சிணம், கீழ்த்திருப்பதி கோவிந்தராஜர் கோயிலில் ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம், கண்ணுாறு கழிக்க, ஆரோக்கிய குளியல் செய்ய நல்லநாள்நவ.26 கார்த்திகை 10: சங்கடஹர சதுர்த்தி, கார்த்திகை சோமவாரம், திருவண்ணாமலை முருகன் தெப்பம், ஸ்ரீபெரும்புதுார் மணவாள மாமுனிகள் உடையவருடன் புறப்பாடு, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளுக்கு திருமஞ்சனம், நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி, திருவெண்காடு, திருக்கழுக்குன்றம், திருவாடானை, திருக்கடவூர் கோயில்களில் 1008 சங்காபிேஷகம், கரிநாள்நவ.27 கார்த்திகை 11: சுவாமிமலை முருகன் ஆயிரநாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் ஆண்டாள் திருமஞ்சனம், பத்ராசலம் ராமர் புறப்பாடுநவ.28 கார்த்திகை 12: முகூர்த்த நாள், திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் புறப்பாடு, முருகனுக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல், புதன் வழிபாட்டு நாள், விஷ்ணு கோயில்களில் நெய்தீபம் ஏற்றுதல்நவ.29 கார்த்திகை 13: திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் ராமருக்கு திருமஞ்சனம், அகோபில மடம் 31வது அழகிய சிங்கர் திருநட்சத்திர வைபவம், சுவாமிமலை முருகன் வைரவேல் தரிசனம்நவ.30 கார்த்திகை 14: மகாதேவாஷ்டமி, கால பைரவாஷ்டமி, ஸ்ரீவாஞ்சியம், திருநாகேஸ்வரம் சிவன் கடைஞாயிறு உற்ஸவம், சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம், ராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்திமண்டபம் எழுந்தருளல், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் வேதவல்லித்தாயாருக்கு திருமஞ்சனம்