உள்ளூர் செய்திகள்

இந்த வாரம் என்ன

டிச.8 கார்த்திகை 22 : சந்திர தரிசனம், மூர்க்கநாயனார் குருபூஜை, பெருமாள் கோயில்களில் திருப்பல்லாண்டு உற்ஸவம், ஸ்ரீவில்லிபுத்துார் வேத பிரான் பட்டர் திருமாளிகையில் பச்சை பரப்புதல்.டிச.9 கார்த்திகை 23: சிறப்புலி நாயனார் குருபூஜை, ஸ்ரீ ரங்கம், காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவல்லிக்கேணி பெருமாள் கோயில்களில் பகல்பத்து உற்ஸவம், ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் ராஜாங்க சேவை.டிச.10 கார்த்திகை 24: கார்த்திகை சோமவார சங்காபிேஷகம், ஆழ்வார் திருநகரில் நம்மாழ்வார் கண்ணன் திருக்கோலம், நெல்லை நெல்லையப்பர் கொலு தர்பார், சங்கரன்கோவில் கோமதியம்மன் 1008 கலசாபிஷேகம்.டிச.11 கார்த்திகை 25: சதுர்த்தி விரதம், வரசதுர்த்தி, கதளி கவுரிவிரதம், திருச்சானுார் பத்மாவதி தேர், ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் மோகினி அலங்காரம், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் பகல்பத்து உற்ஸவம், தேனி குரங்கணி முத்து மாலையம்மன் புறப்பாடு.டிச.12 கார்த்திகை 26: முகூர்த்த நாள், திருவோண விரதம், காஞ்சிபுரம் வரதராஜர், திருவள்ளூர் வீரராகவர் திருமொழி திருநாள் தொடக்கம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப்பெருமாள் கண்ணன் திருக்கோலம், ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் காளிங்க நர்த்தனம்.டிச.13 கார்த்திகை 27: முகூர்த்த நாள், சஷ்டி விரதம், சம்பக சஷ்டி, பைரவருக்கு வடைமாலை சாத்துதல், புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயில் மாணிக்கவாசகர் வெள்ளிச் சிவிகை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப்பெருமாள் பரமபதநாதர் கோலம், அழகர்கோவில் கள்ளழகர், காஞ்சிபுரம் வரதராஜர் பகல்பத்து உற்ஸவம்.டிச.14 கார்த்திகை 28: முகூர்த்த நாள், நெல்லை, திருச்செந்துார், மதுரை, சிதம்பரம், செப்பறை, சுசீந்திரம் கோயில்களில் திருவாதிரை உற்ஸவம் ஆரம்பம், ஆவுடையார்கோவில் மாணிக்கவாசகர் யோகாம்பிகை திருக்கோலம், ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் கஜேந்திர மோட்சம், வள்ளியூர் சுப்பிரமணியர் தெப்பம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப்பெருமாள் பகாசுரவதம்.