உள்ளூர் செய்திகள்

இந்த வாரம் என்ன

டிச.15 கார்த்திகை 29: ஸ்ரீரங்கம், மன்னார்குடி கோயில்களில் பகல்பத்து உற்ஸவ சேவை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பட்டாபிராமர் திருக்கோலம், சிதம்பரம் சிவன் சந்திரபிரபை, ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் உலா, ஆவுடையார் கோவில் மாணிக்கவாசகர் முதலமைச்சர் திருக்கோலம்.டிச.16 மார்கழி 1: சடசீதி புண்ணியகாலம், மார்கழி மாதப்பிறப்பு, திருப்பாவை, திருவெம்பாவை உற்ஸவம் ஆரம்பம், ஆவுடையார் கோவில் மாணிக்க வாசகர் திரிபுர சம்ஹாரம், ஸ்ரீவில்லிபுத்துார், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி முரளி கிருஷ்ணன் திருக்கோலம்.டிச.17 மார்கழி 2: வாயிலார் நாயனார் குருபூஜை, ஆவுடையார் கோயில் மாணிக்க வாசகர் சிவபூஜை காட்சி, நெல்லை நெல்லையப்பர், குற்றாலம் குற்றாலநாதர் ரிஷப வாகனம், ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் முத்துக்குறி கண்டருளல், ஸ்ரீரங்கம் நம் பெருமாள் நாச்சியார் திருக்கோலம், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் அமிர்த மதன காட்சி, டிச.18 மார்கழி 3: வைகுண்ட ஏகாதசி, விஷ்ணு கோயில்களில் ராப்பத்து உற்ஸவம் ஆரம்பம், ஆவுடையார் கோயில் மாணிக்க வாசகர் ஊர்த்துவ தாண்டவம், குற்றாலம் குற்றாலநாதர் தேர், ஸ்ரீரங்கம் நம்பெருமாள் முத்தங்கி.டிச.19 மார்கழி 4: திருப்பதி ஏழுமலையான் பிரதட்சிணம், நாச்சியார் கோயில் எம்பெருமான் தெப்பம், ஆவுடையார் கோயில் மாணிக்க வாசகர் மண்சுமந்த கோலம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, சங்கரன் கோவில் சங்கரநாராயணர் யானை வாகனம், கோமதியம்மன் அன்னவாகனம்.டிச.20 மார்கழி 5: கார்த்திகை விரதம், பிரதோஷம், சிதம்பரம் சிவன் கைலாச வாகனம், காஞ்சிபுரம் வரதராஜர், மதுரை கூடலழகர் திருவாய் மொழி உற்ஸவ சேவை.டிச.21 மார்கழி 6: சிதம்பரம் சிவன் பிட்சாடனர் திருக்கோலம், ஆவுடையார் கோயில் மாணிக்க வாசகர் தேர், சங்கரன் கோயில் சங்கரநாராயணர் தந்தப்பல்லக்கு, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, ஸ்ரீவில்லிபுத்துார் ரங்கமன்னார் அழகர் கோயில் கள்ளழகர் ராப்பத்து உற்ஸவ சேவை, கரிநாள்.