தலவிருட்சங்கள் - 16
ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் கோயில் - உறங்காப்புளிகாரியார், உடையநங்கை என்னும் தம்பதியருக்கு பிறந்தவர் சடகோபர். பிறந்தது முதல் குழந்தை அழாததால் பெற்றோர் கவலையடைந்தனர். துாத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ஆதிநாதப் பெருமாள் கோயிலுக்கு அழைத்துச் சென்றனர். அங்குள்ள புளிய மரத்தடிக்கு தவழ்ந்து சென்ற குழந்தை 16 ஆண்டுகள் அங்கேயே தியானத்தில் ஆழ்ந்தது. இந்நிலையில் தீர்த்த யாத்திரை சென்ற மதுரகவி என்பவர் அயோத்தியில் இருந்தார். ஒருநாள் தென் திசையில் இருந்து ஜோதி ஒன்று பளீர் என அவருக்கு மட்டும் தெரிந்தது. உடனே அங்கிருந்து கிளம்பினார். கடைசியில் அந்த ஜோதி ஆழ்வார் திருநகரியில் உள்ள புளியமரத்தில் நிலை கொண்டது. அங்கே சடகோபரைக் கண்டு தன் குருநாதராக ஏற்றார். நம்மாழ்வார் என போற்றப்பட்ட சடகோபர் முக்தி அடைந்ததும் அவரது உடல் புளிய மரத்தடியிலேயே வைக்கப்பட்டு கோயில் எழுப்பப்பட்டது. நம்மாழ்வாரின் பெருமையை அவரது சீடரான மதுரகவியாழ்வார் மக்களிடம் பரப்பினார். பெருமாளை திருமணம் புரிய விரும்பிய மகாலட்சுமி இங்கு தவமிருந்தாள். அவளை மகிழம்பூ மாலையாக்கி பெருமாள் அணிந்து கொண்டார். பெருமாளுக்கு சமமாக நம்மாழ்வாரும் இங்கு வணங்கப்படுகிறார். இந்திரன் வழிபட்டு தனக்கு ஏற்பட்ட சாபத்தை போக்கிய இத்தலத்திற்கு தாந்த ேக்ஷத்திரம், பரமபத எல்லை என்றும் பெயருண்டு. நவக்கிரக தோஷம் தீரவும், விருப்பம் நிறைவேறவும் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து, வஸ்திரம் சாத்துகின்றனர். நவதிருப்பதிகளில் ஒன்றான இது குருபகவானுக்கு உரியது. நம்மாழ்வார் தவம் புரிந்த புளியமரமே தலவிருட்சம். பழமையான இம்மரம் ஏழு கிளைகளுடன் 5000 ஆண்டுகளாக உறங்காமல் எப்போதும் விரிந்த நிலையில் இருப்பதால் 'உறங்காப்புளி' எனப்படுகிறது. சுயம்பு மூர்த்தியான ஆதிநாத பெருமாளைக் கண்விழித்து காவல் புரிவதால் புளிய மரத்தின் இலைகள் மூடுவதில்லை. டமரண்டஸ் இண்டிகஸ் (Tamarandus indicus) என்பது இதன் தாவரவியல் பெயர். பேபேசியே குடும்பத்தைச் சேர்ந்தது. சித்தர் போகர் பாடிய பாடல்புளியிடை பெயர்தனையே புகலக்கேளுபெரிதான திர்திருணியினுட சாம்பல்மாகும்அளியினுட வம்புலி சஞ்சாசுக்கிலகமறிந்தமாம் பகுதிபத்திரா கனச்சாவாகுங்களியினுட கனச்சாய மிலேமிமலமாகுங்காதுல மாந்த பூரமாகுங்களியிடை சீரகமாந் தம்மில்பூசங்கண்டுரைத்த நாமமெல்லாம் புளியின்பேரே.அடவான, உக்கிலாதி அணிப்பூ வென்றும் பேருஅருளினோம், முன்னுந்தி என்றும் பேருவடவானக்க தராதி என்றும் பேருவாழாண்டி என்றதற்குப் பேருண்டாச்சுமடவான, வடமாதென்றும் பேருவசனித்தோம், துரோநாடமென்றும் பேருதடவான, வாட்டி வஞ்சமென்றும் பேருதருவான, புளியதுவின்உசிதப் பேரே.திருதிருனி, சாம்பல், அம்புலி, சுக்கிலகம், பகுதி பத்திரம், கனச்சாவரம், சிலெனிமலம், மாந்தபூரம், சீருகம், உகிலாதி, வடமாகு, உதராதி, உண்ணுந்தி, வஞ்சம் என புளியமரத்தின் பெயர்களை போகர் குறிப்பிடுகிறார்.சித்தர் அகத்தியர் பாடிய பாடல்புளியம் பிஞ்சு மலபந்தம்புகலும் நடுக்காய் பயித்தியமாம்வளரும பழைய புளியதனால்வயிற்றுப் பசியாம் பேதியுமாம்கிளரும் பழைய புளிக்குணத்தால்கிருமி நாசம் பயித்தியம் போம்தளரு மிடையாய் கொண்டால்சார்வா ரிதனை ஆள்வாரே!அழுபுண்ணை நீக்கும் அடல்சோபை மாற்றும்எழுபாண்டு வைப்போக்கும் இப்பால்-முழுதும்அளியச் சிவந்தகண்ணோ யாற்றுங் கனலாம்புளியிலையை நன்றாய்ப் புகல்.புளிய இலையை சாப்பிட கண்ணிலுள்ள சிவப்பு மாறும். உடல் சூடு தணியும். பித்தத் துடனே பெருத்த அரோசகம்போம்மெத்தவெழும் வாந்தி மிதத்துண் நிற்கும்-மெத்தக்கனத்துப்பூ ரித்தமுலைக் காரிகையே! வெற்பார்வனத்துப் புளியம்பூ வால்.புளியம்பூவை மென்று சாப்பிட குமட்டல், வாந்தி, சுவையின்மை நீங்கும். சோபமொடு பித்தந் தொலைக்கும் உரிசைதருங்கோபமுற வாயுவையே கொண்டாடுந்-தாபக்கருப்பமட வார்க்குக் கனவிருப்பம் உள்ளேபருப்பையுறாப் பைம்புளியங் காய்.புளியம் பிஞ்சை சாப்பிட்டால் சோர்வு நீங்கும். கர்ப்பிணிகளுக்கு குமட்டல் கட்டுப்படும். புத்தியும் மந்த மாகும் பொருமியே உடலு மூதும்பத்தியம் தவறும் சன்னி பாதமாம் சுரங்கள் விறுஞ்சர்த்தியும் பித்துந் தீரும் தனுவெலாம் வாத மேறும்மத்திபந் தாது புஷ்டி வருந்திரை நரையு விக்கே.வேந்தனுக்கே சார்பாகி மேலிலிருவர்க் கும்பயனாம்சேந்தவனுக்குக் காணியிடஞ் செய்யும்-சாந்தமிலாப்பாம்பாக வாகம் பருவரலெய் தப்புரியும்ஆம்பிர நோய்க்கான வாம்.புளியம்பழத்தை அடிக்கடி சாப்பிட்டால் மூளை வளர்ச்சி குறையும். உடல் பெருக்கும். உடலில் வாயு பெருகி நரைமுடி அதிகரிக்கும். பித்தம் கூடும். புளி சேர்த்த உணவுகளை சாப்பிட உடல் சூடு அதிகரிக்கும். எப்படி செல்வது திருநெல்வேலியில் இருந்து 25 கி.மீ.,நேரம்: காலை 7:00 - 12:00 மணி; மாலை 5:00 - 8:00 மணிதொடர்புக்கு: 04639 -- 273 607-தொடரும்ஜெ.ஜெயவெங்கடேஷ்98421 67567